Saturday, August 1, 2015

பிருகுமகரிஷி - நிகண்டு (மருதேரியில் அன்னம் பாலித்தல் )


மருதேரி பிருகுமுனி  சீடர்களிடம் அன்னம் பாலித்தல் பற்றி உறைதல் 
  
அன்னம் 


 நிற்கவே சூட்சமத்தை இன்று சொல்வோம் 
      நெறியான ஞானத்திற்கு தடையானது தான் 
    உற்ற பசி அதனால் உண்டாகும் சினமும் தானே 
      ஒதிட்டோம் துர்வாசன் என்னும் உவமை 
   பெற்ற தனம் தனில்பசி ஆற்றுவிக்க 
      பிழையற பேதமற தலத்தின் அன்னம் 
   உற்ற செயல் மாறாது மாச்சரியம் அற்று 
     உள்ளம்நோகா மருந்தெனவே ஈவாய் அப்பா 


   ஈவாயே எக்குணமும் உள்ள மாந்தர் 
       இருளென்ற கடும் பீடை உள்ளவர்க்கும் 
    பூவுலகில் இறை பற்றே அற்றோர் ஆனாலும் 
      பற்றியும் தடம் நோக்கி வந்துவிட்டால் 


Thursday, July 30, 2015

குரு பௌர்ணமி / GURU POURNAMI

குரு பௌர்ணமி / GURU POURNAMI

அகத்தியர் சோதி பிருகு அருள் நிலையத்தில்  அருள்வடிவான அகத்திய மாமுனியை 
 ஆனந்த சோதியான மரகத கொழுந்தினை 
 நயம்பட வாக்கீந்து மருதேரி தொற்றுவித்தானை   
 நன்நீர் நூபரகங்கை நல்கிய நிதியானை  
சன்மார்க்கம்  தழைக்க அருள்நிலையத்தில் நிறைந்தானை 
 சித்தர்நெறி  இங்குபரப்பும் சித்தம் கொண்டானை 
 சோதி பிழம்பான பரம்பொருள் அம்சமதாய் 
 அகண்டசோதியில் இனி போற்றுவோம் வம்சமாதாய் 


அகண்டம்  அதில்  பிருகுவின் அம்சமுடன் 
அருள்வாய் அய்யனே  இனியுன் வம்சமுடன் 
நல்தலம் மருதேரியில் செய்உயர்  மருந்தாய் 
நோய்பிணி போக்க வந்து அமர்ந்தாய் 
குறை எல்லாம் போக்கும் கும்பமுனியாய் 
குவலயத்தில் ருணம் தீர்க்கும் நன்னிதியாய் 
பூரணமான ஆசிகள் தந்துநற் கதி காட்டி 
பல்லோரும் ஏற்றும் மலர்பதமே போற்றி 

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை 
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர் 
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை 
வென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம் 
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும் 
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்

குருவடி பொற் தாழ் சரணம் சரணம் 
கும்பமுனியே சரணம் சரணம் 
திருவடி நாதா சரணம் சரணம் 
சித்தர்கள் அருளே சரணம் சரணம் 
அருள்வடிவு ஆனாய் சரணம் சரணம் 
அமரர்கள் கோவே சரணம் சரணம் 
பொருள் அடி மூலம் காட்டிற்று 
போதித்த குருவே சரணம் சரணம் Wednesday, July 22, 2015

Divine Well & Wellness ( அமிர்த தீர்த்தம்) - Bhrigu Arul Nilayam -2

Divine Well & Wellness / அமிர்த தீர்த்தம்

 பஞ்சபூத அம்சமான நீர் பல நோய்களை போக்கும் தன்மை உடையது. இது காலம் அழகிய அமைப்பு உடைய நீர் நிலை, மருதேரி பிரிகு மகரிஷி அருள் நிலையத்தில்  உருவாகி வருகிறது.


CELEBRATING THE FIRST WATER FLOW


இந்த நீர்நிலையை பற்றிய நிகண்டினை இப்போது காண்போம். நிகண்டு எனப்படுவது 8 வரிகள் கொண்ட பாடல்கள். இது பொருள்களை தருவதற்காக செய்த நூல்கள் ஆகும் ( Nigandu in English can be interpreted as compiled guidelines to understand and follow)

பிரிகு மகரிஷி நிகண்டு 

"முதலான தீர்த்தம் அதே நிச்சயித்த
     முடிவுருமோர் நந்தியதின் சின்னம் வைத்தே 
  பூதலத்தில் காமதேனு அம்சம் ஒப்பாய் 
      பெண் ஆணும் பாகமதாய் நிறுவிபாரே 
  ஒதவதால் ஊரணியும் தெய்வ அம்சம் 
      ஔடதமாய் சித்திக்கும் வருவோர்க்கு எல்லாம் 
  நாதமான சுழியரிவை அதிர்வை தூண்டி 
      நிலைநாட்டும் ஆத்மவிளக்கம் தன்னால் கூடும் "


English Translation
  

@Maruderi amongst Panchabootha Divine water is first as decided
         Have this place symbolized with NANDI
   In the World the KAMADHENU as divine Hamsam
         Have MALE-FEMALE partitions Symbolized  
   The water spring here is of DIVINE nature
         Will work as Healing-Medicine for all who visit here
   Opens the soundbased knowledge through Vibrations
          Firm explanation of Athman will be experienced
   
   
         THE WELL OF WELLNESS - Behind the scenes
To be continued..


Sunday, July 19, 2015

திருவடி தொழுதல்.(The Paradox of Feet)


இந்தியாவின் பழைய  வழக்கத்தில் முக்கியமான முறையாகவும், இன்றும் புழக்கத்தில்  உள்ள முறை அடி தொழுதல் என்னும் பாதம் போற்றுதல்.

மலரடி தொழுதல், திருவடி, அடி பணிதல், தாள், இணையடி என்று வரும் சொற்கள் பல புராணங்களில் காணலாம், இந்த வழக்கம் இன்றும் இருப்பதை குடும்பம் என்று ஆரம்பித்து ஞான மார்க்கம் வரை பயன்பாட்டில் இருப்பதை பார்க்கலாம். இன்று காலில் விழுந்து கும்பிடும் முறையை தான் ஒரு அலசலுக்காக எடுத்து கொள்ள போகிறோம். காலில் விழுந்து கும்பிடும் முறை சரியா ???சன்மார்க்கம் தழுவி உண்மை வழி நிற்கும் இரு மார்க்கம் பற்றி இங்கு பேசுவோம்.

முதலாக .....
அப்பா சிவானந்தர் வழி வரும் சித்த வித்யார்த்திகள், உயர் சித்தவித்தை பழகும்  வாசி யோகிகள். அத்ம வித்தை பெற்ற இவ் வித்யார்த்திகள், யார் காலிலும் விழுந்து வணங்குவதில்லை. எல்லோரும் இறையின்  அம்சமாய் , எல்லா உயிர்களும்  ஈஸ்வர சைதன்யம் கொண்டே இயங்குவதால் யார் காலிலும் விழுந்து வணங்குவது கிடையாது.  உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது மனிதர்களில் கிடையாது ஏனெனில், எல்லோரும் ஈசன் அம்சமாகி இருப்பதால் வணங்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவதாக
அய்யன் பிருகு மகரிஷி சீட வர்க்கம் குரு பூசையில் வருவோர் அனைவரது காலகளையும் நீர் கொண்டு சுத்தம் செய்யபடுகிறது. இங்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாராது, பாத நீர் சுத்தி முறை உள்ளது . நம்முள் இருக்கும் உயிராகிய ஈசனை தாங்கும் உடலை நடத்தும் கால்கள் சுத்தம் செய்ய படுகிறது.  தான் பரம்பொருளின் அம்சம் என்று வருவோர்க்கு உணர்த்தவே இம்முறை செய்ய படுகிறது.

இரண்டு நேர் எதிர் மறையான செயல் ஒரே சத்தியத்தை விளக்குகிறது. அது  "ஈசன் நம்முள் இருக்கிறான் என்னும் அகமார்கத்தை " பறை சாற்றுவதே. ஆகையால் செயலை பார்த்து உண்மையை நழுவ  விடாதீர்கள்


Wednesday, May 27, 2015

வாக்கு-4 (96 தத்துவங்கள்)

"தத்துவம் எல்லாம்"  நமக்கு  "உயிர் உடலெடுத்த" உண்மையை  உணர்த்துவதே.

அக்தாவது ...அண்டத்தில் இருந்து பிண்டம் உருவானதை..., பீஜம் என்னும் கருவிலிருந்து கோசம் உருவானதை..., ஒளி-ஒலி மூலமாய் கொண்டு நாம் உருவானதை விளக்கும் ஒரு உடலும்-உயிரும் சார்ந்த அறிவியலே. தத்துவம்- That-becomes-U என்பதே பொருள் . இந்த அறிவியலை சித்தாந்தம் என்று சித்தர் உரைப்பர். இந்த சித்தாந்தம் என்னும் அறவியலில், சைவம் நம் முன் வைக்கும் விளக்கும் - 96 தத்துவங்கள் (Inner + Outer).

ஓர் பொருள் (அகரமான உயிர் ) கரு , 96 தன்மை உடைய விருட்சமாய் பிரிந்து விரிந்து மனிதன் ஆகின்றான்.  விளக்கம் விளங்க ஆய்ந்து அறிவது சிறப்பு. இல்லையேல் உயர்ந்த உண்மை இருந்தாலும் ,அதை தெளிந்து உணரும் வாய்ப்பு கடைசி வரை ஒருவர்க்கு இல்லாமல் போய் விடுகிறது. ஆய்வே விசாரம் எனப்படும். விசாரமே ஞானத்திற்கு வழி வகுக்கிறது.

நாம் இந்த வலை பதிவில் 96 தத்துவங்களில் உள்ள  "4-வாக்கு" என்பதை மட்டும் ஒரு சிறிய ஆய்விற்கு இப்போது எடுத்து கொள்ளலாம். வாக்கின்  அதிபதி கலைவாணியே ஆகும்.


விந்து, நாதமே தத்துவத்தின் பிரதானமாய் உள்ளது. நாதமே ஒலி வடிவமாய் உள்ளது . சப்தம் வாக்கின் வெளிபாடு தான்.வாக்கினை  நான்காக பிரிக்கிறது சைவம். அதாவது 

1) சூக்குமை (அல்லது) பர 
2) பைசந்தி 
3) மத்திமை 
4) வைகிரி 

சூக்குமை(பரா) - ஒலியின் முதல் நிலை பரத்துடன் சேர்ந்து நிற்பதே. ஒலி யானது ஒளி உடன் சேர்ந்து உள் நிற்கும் இடமே சூக்குமை அல்லது பர எனப்படும் . இதனை பரநாதம், சூக்கும வாக்கு  என்றும் உரைப்பர் 

பைசந்தி - பர நாதம் என்பது அதிர்வாகி (frequency) உணரும்/காணும் வகையாக மாறுகிறது. நாதமும் + உணர்வும் கலந்து இங்கே நிற்கின்றது 

மத்திமை - ஒலி இங்கு பிராணன் உடன் கலந்து ஓசையாய் மனம் மட்டும் கேட்கும் வண்ணம் நிற்கின்றது 

வைகிரி -  ஒலி இங்கு உதானன் உடன் கலந்து. இங்கிருந்தே ஓசை  தூல நிலை சப்தமாய் புறம் எழும்பி கேட்கும் தன்மை பெறுகிறது 


வாக்கின் இந்த நாலு நிலைகள் தச வாயு, ஆதாரங்கள், மனதின் அவஸ்தைகள் என்ற மற்ற விசயங்களையும் தொட்டு நிற்கிறது. ஒலியை பிடித்து கொண்டே பர நிலை அடைந்ததோர் உண்டு. 


"தேகமதில் ஒளி ஒலியின் அளவை மாற்றி 
   தோன்றும்பிணி மறைப்பு மாயை யாவும் வென்று 
 தேகத்தை தூய வடிவமாக்கி மேலாய்   
   மேலாய்  சித்தி பெற்றோர் கோடிகோடி "  ----------------நந்தி 

"சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி" ----- அவ்வை உபயோகமான சில URL :Friday, May 15, 2015

BHRIGU ARUL NILAYAM - PART 1


WWW.BHRIGUAN.ORG an organization that will renew guru bhrigu and siddhar practices - 


The “Bhrigu Arul Nilayam” is an organization that works towards the welfare of mankind. The core focus of the org is oriented towards 3 main activities which are
1.     Siddha medicine (Research & formulation), treatment and training.
2.     Mind-Skills (Exploring manuscripts, Practicing techniques and Publishing texts) of Siddhars
3.     Food sharing (Anna Dhanam) 

The science of "self" is about the mind and body. Thus it is important to understand the physical and mental form of human being. More important than that is to know who siddhas/Siddhars are.
Siddhars are altruistic personalities who are geniuses of mind, mavens of medicine, experts in metals and masters of nature elements like Space, Air, Fire, Water and Earth. The 2 ends of Maths, the zero & infinity are hard to comprehend for a human mind.  Anything between these 2 points are visible, definable and hence understandable. The same holds good for the following line too. From bareness manifests boundless atoms, which has created all things that constitutes the universe.  This absolute progressions elusive for humans, are understood only by Siddhas. This ability of Siddhars allows them to understand, the inheritance of prime source/nothingness that mutated and transmutated into billions for millions of years. All these get fathomed by the great siddhas.
Siddhars thus have a clear and factual explanation of how our inner life manifested into the tangible physical form and subtle mental forms. This brings out the physics, chemistry and biological aspects of human body and their relations in a more comprehensive way. The mankind has reached great heights, yet there stands a huge gap between the factual self v/s present knowledge of self. What is understood till now is declared as science and the gap is unknown. In other words understood is logic and remaining is magic for today’s beings.

Our organization with Guru Bhrigu and other Siddhas guidance are determined to make a change in life of people seeking truth and those willing to take the direction of factual self. We are here to “mind the gap” and help bridge knowledge for seekers.
will continue....

Sunday, May 10, 2015

மெய்கண்ட தேவர் / Meikanda devar

மெய்கண்ட தேவர் 


மெய்கண்ட தேவர்


மெய்கண்ட என்றால் உண்மையை கண்ட என்பது பொருள். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுந்தரர் ஞானம் பெற்ற தலத்தில், 780 வருடங்களுக்கு  முன் வாழ்ந்தவர் மெய்கண்ட நாயனார். இந்த தலத்திற்கு பெயர் திருவெண்ணெய் நல்லூர் ஆகும்.

பக்தி என்னும் நிலையை தாண்டி, தான் யார் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் அறிவே சித்தாந்தம்.

சைவ மதத்தை தழுவி ஞான நிலையை அடைபவர்கள் "சைவ சித்தாந்தம்" என்னும் உயர் அனுபவத்தை நம் முன் வைக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதியாக 12 முதல் 14ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய பாடல்களே மெய்கண்ட சாத்திரங்கள். மொத்தம் 14 சாத்திரங்கள் உள்ளது, 4 பெயர்களால் ஏற்ற பட்டுள்ளது. இதனில் மெய்கண்ட தேவர் எழுதியது 12 சூத்திரங்கள். இவர் குருவின் பெயர் பரஞ்சோதி முனிவர்.

மெய்கண்ட தேவர் ஜீவசமாதி 


Click here for>>சிவஞானபோதம்-தமிழ் 
Click here for>>சிவஞானபோதம்-English 

மெய்கண்டார் ஜீவசமாதி திருவெண்ணெய் கோவில் அருகே உள்ளது. ஆதீனத்தில் இருப்பதால் வாசல் மதியம் மூடுவதில்லை. தியானம் செய்ய ஒரு அருமையான இடம். இதை எழுதும் பொது ஈஸ்வரபிரசாத் அய்யா சொன்னது நினைவுக்கு வருகிறது..... .
"மெய் என்ன என்று உணர்வே இந்த மெய். இது மெய்"

Click here for>>மெய்கண்ட தேவர் வரலாறு